சுனிதா வில்லியம்ஸ்க்கு குவியும் பாராட்டு….ஸ்பேஸ் வாக் செய்து சாதனை
'ஸ்பேஸ்வாக்' 5 மணி நேரம் 26 நிமிடங்கள் நீடித்தன
சுனிதா வில்லியம்ஸ்க்கு குவியும் பாராட்டு….ஸ்பேஸ் வாக் செய்து சாதனை
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்தபடி, அதிக நேரம் 'ஸ்பேஸ் வாக்' செய்த பெண் என்ற சாதனைக்கு சுனிதா வில்லியம்ஸ் சொந்தக்காரர் ஆகியுள்ளார்.
ஜூன் மாதம் 5ம் தேதி ஆய்வுக்காக சர்வதேச விண்வெளி மையத்திற்கு நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் போயிங் ஸ்டார் லைனர் விண்கலத்தில் சென்றனர். ஆனால், விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருவரும் பல மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கி உள்ளனர்.
அவர்கள் விரைவில் பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை அழைத்துவர அமெரிக்க அதிபர் டிரம்ப், ஸ்பேஸ்எக்ஸிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் அதிக நேரம் 'ஸ்பேஸ் வாக்' செய்த பெண் என்ற சாதனைக்கு சுனிதா வில்லியம்ஸ் சொந்தக்காரர் ஆகியுள்ளார். மிகுந்த பாதுகாப்புடன் நடந்த 'ஸ்பேஸ்வாக்' 5 மணி நேரம் 26 நிமிடங்கள் நீடித்தன.
9வது முறையாக ஸ்பேஸ் வாக் செய்துள்ள சுனிதா வில்லியம்ஸ், இதுவரை விண்வெளியில் மட்டும் 62 மணி நேரம் 6 நிமிடங்களை கழித்துள்ளார். சுனிதாவுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.