விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு!

Sep 25, 2024 - 10:44
 11
விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு!

ஜம்மு-காஷ்மீரில் 2ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டு, முதல்கட்டமாக 24 தொகுதிகளுக்கு கடந்த 18-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், இரண்டாம் கட்டமாக, ரியாஸி, ரஜோரி, பூஞ்ச், ஸ்ரீநகர் உட்பட 6 மாவட்டங்களில் உள்ள 26 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்த தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத்தலைவர் உமர் அப்துல்லா உட்பட 239 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.

இதில், 25 லட்சத்து 78 ஆயிரம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

3 ஆயிரத்து 502 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், முழுமையாக வெப்கேஸ்டிங் செய்யப்படுகிறது. இதனிடையே, நவ்ஷேரா தொகுதியில் போட்டியிடும் பா.. வேட்பாளர் ரவீந்தர் ரெய்னா, புதிய சட்டமன்றத் தொகுதியான வைஷ்ணவ்தேவி தொகுதியில் போட்டியிடும் பா.. வேட்பாளர் பல்தேவ் ராஜ் ஷர்மா ஆகியோர் வழிபாடுகளுக்குப்பின் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.