படபட பட்டாசாய் வெடித்து சிதறும் மின்கம்பம்! | Pudukkottai
படபட பட்டாசாய் வெடித்து சிதறும் மின்கம்பம்! நேரடி காட்சிகள் |
Pudukkottai
புதுக்கோட்டையில் நேற்று இரவு பலத்த காற்று இடி மின்னலுடன் பலத்த மழை கொட்டியது இதுநாள் புதுக்கோட்டையில் மின்சாரம் நிறுத்தப்பட்டு காற்று நின்றவுடன் மீண்டும் மின்சாரம் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் புதுக்கோட்டை நகரப் பகுதியான கீழ மூன்றாம் வீதியில் நேற்று நள்ளிரவு தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு சொந்தமான மின் கம்பத்தில் திடீரென தீ பற்றி எரிய தொடங்கியது இதனால் வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கும் பாக்ஸ் வெடித்து சிதறியதால் நான்கு மணி நேரம் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
புதுக்கோட்டை கீழ மூன்றாம் வீதியில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயம் அருகே நேற்று நள்ளிரவு அங்குள்ள மின்சார கம்பத்தில் உள்ள பாக்ஸ் தீப்பற்றி எரியத் தொடங்கியது அப்பொழுது வீடுகளில் உள்ள மின் விளக்குகள் விட்டுவிட்டு எரிந்துள்ளது. இதனால் ஏதோ பிரச்சினை நடக்கிறது என உணர்ந்த பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வந்து பார்க்கும் பொழுது தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு சொந்தமான மின்சார கம்பத்தில் வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கும் பாக்சில் லேசாக புகை வர தொடங்கியது பின்னர் திடீரென தீப்பற்ற தொடங்கிய அந்த பாக்ஸ் பின்னர் பலத்த சத்தத்துடன் 20 முறைக்கு மேல் வெடித்து சிதறியது இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும் தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுத்தனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க முடியாமல் தவித்தனர் இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மின்சார வாரிய ஊழியர்கள் டிரான்ஸ்பாரை ஆப் செய்து பிறகு தண்ணீரை கொண்டு பீச்சி அடித்து தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்தினர்
இந்நிலையில் நேற்று நள்ளிரவு இந்த பாக்ஸ் வெடித்து சிதறியதால் பொதுமக்கள் வீடுகளுக்கு மின்சாரம் இல்லாமல் சுமார் நான்கு மணி நேரம் அவதிப்பட்டனர்.