சிரியா அதிபருக்கு புகலிடம் கொடுத்த ரஷ்யா..நடந்தது என்ன?

அதிபர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளியேறுமாறு ரஷ்யா அறிவுறுத்தல்

Dec 9, 2024 - 14:04
Dec 9, 2024 - 14:35
 10
சிரியா அதிபருக்கு புகலிடம் கொடுத்த ரஷ்யா..நடந்தது என்ன?

சிரியா அதிபருக்கு புகலிடம் கொடுத்த ரஷ்யா..நடந்தது என்ன?

சிரியா அதிபர் அல் ஆசாத் அந்நாட்டை விட்டு தப்பித்து நெருங்கிய நட்பு நாடான ரஷ்யாவில் குடும்பத்துடன் புகலிடம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிரியா தலைநகரை கிளர்ச்சி படைகள் பிடித்த சிலமணி நேரங்களில் அதிபர் அல் ஆசாத் தனது குடும்பத்துடன் வெளியேறி விட்டதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

இணக்கமான அதிகார பகிர்வு நடைபெற வேண்டும் என்பதால் அதிபர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளியேறுமாறு தாங்கள் அல் ஆசாத்தை அறிவுறுத்தியதாகவும் ரஷ்யா குறிப்பிட்டுள்ளது.

ஆனால் அதிபர் அதிபர் அல் ஆசாத் எங்கு சென்றார் என்ற தகவலை ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் இதுவரை தெரிவிக்கவில்லை.

இருப்பினும் ரஷ்யாவின் முக்கிய செய்தி முகமைகளான டாஸ், ரியான் நாவஸ்டி ஆகியவை சிரியா அதிபர் தனது குடும்பத்துடன் ரஷ்யா தலைநகர் மாஸ்க்கோவுக்கு வந்து இறங்கியுள்ளதாகவும்.

மனிதாபிமானத்தின் அடிப்படையில் அவருக்கு ரஷ்யா அடைக்கலம் கொடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியிட்டுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, அல் ஆசாத் எங்கு சென்றார் என்பதை அறிய விமானங்களை பின்தொடரும் செயலிகள் மூலம் ஏராளமானோர் முயன்று வருகின்றனர்.

கிளர்ச்சிப்படைகள் டமாஸ்கஸ் நகருக்குள் நுழைந்த போது அங்கிருந்து அவசரமாக புறப்பட்ட விமானம் ஒன்று சிறிது நேரத்தில் ரேடார் இணைப்பிலிருந்து மறைந்ததாக கூறப்படுகின்றன.

இதற்கிடையே சிரியாவில் அல் ஆசாத் அரசுக்கு ஆதரவாக உருவாக்கப்பட்ட தங்கள் நாட்டு ராணுவ தளங்களை கிளர்ச்சியாளர்கள் தாக்காமல் இருக்க ரஷ்யா உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.