திமுகவை நேரடியாக அட்டாக் செய்த விஜய்....2026-ல் திமுக அரசை மாற்றுவோம்!
திமுகவை நேரடியாக தாக்கி பேசிய விஜய், மகளிர் தின வாழ்த்து சொல்வதில் மகிழ்ச்சி தான் ஆனால்.....

திமுகவை நேரடியாக அட்டாக் செய்த விஜய்!
2026-ல் திமுக அரசை மாற்றுவோம்…
திமுகவை நேரடியாக தாக்கி பேசிய விஜய்!
மகளிர் தினத்தன்று தவெக தலைவர் விஜய் திமுக அரசுக்கு எதிராக வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு. மகளிருக்கு எதிரான பாலியல் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவது தொடர்பாக திமுகவை நேரடியாக விமர்சித்த விஜய். மகளிருக்கான பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய திமுக அரசை மாற்றுவோம்.
எல்லா சூழல்களிலும் ஒரு மகனாக, தோழனாக அண்ணனாக உங்களுடன் நிற்பேன் மகளிர் தின நல்வாழ்த்துகள்.
எனக்கு மகளிர் தின வாழ்த்து சொல்வதில் மகிழ்ச்சி தான் ஆனால் பெண்கள் பாதுகாப்பாக இருந்தால் தானே சந்தோஷத்தை உணர முடியும்.
நாம் அனைவரும் சேர்ந்துதான் திமுக அரசை தேர்ந்தெடுத்தோம் ஆனால், அவர்கள் இப்படி ஏமாற்றுவார்கள் என இப்போதுதான் தெரிகிறது.
எல்லாமே இங்கு மாறக்கூடியது தான், மாற்றத்திற்கு உரியது தான் மக்களாகிய நீங்கள் எதற்கும் கவலைப்படாதீர்கள்.
2026-ல் நீங்கள் எல்லாம் சேர்ந்து…இல்லை…நாம் எல்லாரும் சேர்ந்து மகளிருக்கான பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய திமுக அரசை மாற்றுவோம்.
இந்த மகளிர் தினமான இன்று அனைவரும் உறுதியேற்போம் எல்லா சூழ்நிலைகளிலும் உங்களுடன் நான் இருப்போம் என விஜய் உறுதி அளித்துள்ளார்.