அதிகார அத்துமீறலுக்கு கண்டனம்…. அலுவலகங்களில் சோதனையில் ஈடுபட்டு மிரட்டல்!

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் அமலாக்கத்துறை சோதனை வழக்கு

Mar 8, 2025 - 13:38
 3
அதிகார அத்துமீறலுக்கு கண்டனம்…. அலுவலகங்களில் சோதனையில் ஈடுபட்டு மிரட்டல்!

அதிகார அத்துமீறலுக்கு கண்டனம்…. அலுவலகங்களில் சோதனையில் ஈடுபட்டு மிரட்டல்!

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வரும் நிலையில் தற்போது டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசின் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை உள்ளிட்ட அரசியலமைப்பு அதிகாரம் பெற்ற அமைப்புகளை பயன்படுத்தி எதிர்கட்சி ஆளும் மாநிலங்களில் தொடர்ந்து அதிகார அத்துமீறல் நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.  

டெல்லி, ஜார்கண்ட், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் அமலாக்கத்துறை சோதனை வழக்கு பதிவு செய்து தாக்குதல் நடத்தி வருகிறது.

பணியாளர்களை மன உளைச்சலுக்கும், பதற்றத்திற்கும் ஆளாக்கி அமலாக்கத்துறை அத்துமீறுகிறது எனவும் டாஸ்மாக் சங்கம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 

அரசு அலுவலகங்களில் சோதனையில் ஈடுபட்டு மிரட்டல் விடுப்பதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னதாக சத்தீஸ்கர், டெல்லி முதலமைச்சர் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டு மாத கணக்கில் இந்த வழக்கு சார்பாக சிறை வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டிலும், மதுவிலக்கு மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் கைது செய்யப்பட்டு 1 வருடத்திற்கும் மேலாக சிறையில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

 மேலும், 3 நாட்களாக அமலாக்கத்துறை தீவிர சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில் மாநில தலைவர் பெரியசாமி கண்டன அறிக்கை வெளியீட்டுள்ளார்.