வரலாற்றில் முதன்முறையாக பெண்கள் மட்டுமே அணிவக்கும் பாதுகாப்பு....பெண்களிடம் ஒப்படைக்கும் பணிகள் தெரியுமா?
சமூக வலைதள கணக்குகளை பெண்களிடம் ஒப்படைக்க உள்ளார்

வரலாற்றில் முதன்முறையாக பெண்கள் மட்டுமே அணிவக்கும் பாதுகாப்பு!
மார்ச் 8ம் தேதி மகளிர் தினத்தன்று, பிரதமர் மோடி பங்கேற்கும் குஜராத் நிகழ்ச்சியில், இந்தியாவிலேயே முதன்முறையாக பெண்கள் மட்டும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் மார்ச் 8ம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் தனது சமூக வலைதள கணக்குகளை பெண்களிடம் ஒப்படைக்க உள்ளார். அதோடு, அன்றைய தினம் பெண்கள் பிரதமர் மோடியின் சமூக வலைதளத்தில் பதிவுகளை வெளியிடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் பெண்களுக்கும் முன்னுரிமை அளிக்கும் வகையில் மற்றொரு அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
இது குறித்து பேசிய அதிகாரிகள், பிரதமர் மோடியின் பாதுகாப்பை பெண் போலீசார் உறுதி செய்வார்கள். பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக 2,300க்கும் மேற்பட்ட பெண் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என தெரிவித்துள்ளனர்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கைகளைப் பற்றி குஜராத் மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி கூறுகையில், இந்திய வரலாற்றில் முதல்முறையாக வான்சி போர்சி கிராமத்தில் உள்ள ஹெலிப்பேடிற்கு பிரதமரின் வருகையிலிருந்து, மகளிர் தினம் கொண்டாட்டம் நடைபெறும். இது பெருமைக்குரிய ஒன்றியதாகும் என தெரிவித்துள்ளார்.