சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும் அரசியலை தவிர வேறொன்றையும் வெளிப்படுத்தவில்லை – அண்ணாமலை
தகுதி நீக்க நோட்டீஸ் எதற்கு?
சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும் அரசியலை தவிர வேறொன்றையும் வெளிப்படுத்தவில்லை – அண்ணாமலை
நீதிபதிகளையும், நீதித்துறையையும் மிரட்ட தகுதி நீக்க நடவடிக்கையை ஒரு கருவியாக திமுக மற்றும் இண்டி கூட்டணி பயன்படுத்துகிறது. நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட் சென்றுள்ள நிலையில் தகுதி நீக்க நோட்டீஸ் எதற்கு? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும் அரசியலை தவிர வேறொன்றையும் வெளிப்படுத்தவில்லை. அரசியலமைப்பு உரிமைகள் பற்றிய அனைத்து உரத்த பேச்சுகளும்,
இண்டி கூட்டணியினருக்கு வெறும் சொல்லாட்சி மட்டுமே. அரசியலமைப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கின்றனர்.
அரசியலமைப்பிற்கு இதை விட பெரிய அச்சுறுத்தல் என்ன இருக்க முடியும்? திமுக மற்றும் இண்டி கூட்டணி மீண்டும் ஒருமுறை தங்களுக்கு, பிரிவினைவாத அரசியல்தான் முதலில் என்பதை நிரூபித்துள்ளன என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
