பயங்கரவாதிகளின் வரைபடங்கள் வெளியீடு….. இந்தியாவுக்காக உறுதியாக நிற்போம் – அதிபர் ட்ரம்ப்

88 பேர் பாதுகாப்பாக உள்ளனர்

Apr 23, 2025 - 13:39
 12
பயங்கரவாதிகளின் வரைபடங்கள் வெளியீடு….. இந்தியாவுக்காக உறுதியாக நிற்போம் – அதிபர் ட்ரம்ப்

பயங்கரவாதிகளின் வரைபடங்கள் வெளியீடு….. இந்தியாவுக்காக உறுதியாக நிற்போம் – அதிபர் ட்ரம்ப்

பஹல்காமில் தாக்குதலில் இருந்து உயிர் தப்பிய தமிழர்கள் ஸ்ரீநகரில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மதுரையில் இருந்து பஹல்காம் சுற்றுலா சென்ற 88 பேர் பாதுகாப்பாக உள்ளனர். 

பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் வரைபடம் வெளியீடு. தாக்குதலை நேரில் பார்த்தவர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் வரைபடம்.

 தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

 தாக்குதல் நடத்திய இடத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் ஆய்வு செய்து வருகிறார்.

பயங்கரவாதிகள் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அஞ்சலி.

காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை.

3 பேர் காயம் அடைந்த நிலையில் 2 பேர் உடல்நிலை சீராக உள்ளது ஒருவர் அவரச சிகிச்சை பிரிவில் உள்ளதாக தகவல்.

 பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா உறுதியாக நிற்கிறது – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

 காஷ்மீரில் இருந்து வரும் செய்தி ஆழ்ந்த கவலையை அளிக்கிறது பிரதமர் மோடிக்கும் இந்திய மக்களுக்கும் முழு ஆதரவும் ஆழ்ந்த அனுதாபங்களும் உண்டு – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்