நடிகை தங்க கடத்தல் வழக்கு… விவிஐபி ட்ரீட்மெண்டுக்கும் டிஜிபி-க்கும் என்ன தொடர்பு?

நடிகை வைத்த ட்விஸ்ட்?

Mar 11, 2025 - 16:05
 6
நடிகை தங்க கடத்தல் வழக்கு… விவிஐபி ட்ரீட்மெண்டுக்கும் டிஜிபி-க்கும் என்ன தொடர்பு?

நடிகை தங்க கடத்தல் வழக்கு… விவிஐபி ட்ரீட்மெண்டுக்கும் டிஜிபி-க்கும் என்ன தொடர்பு?

நடிகை வைத்த ட்விஸ்ட்?

நடிகை ரன்யா ராவ் தங்க கடத்தல் வழக்கில் கர்நாடக அரசின் இணை முதன்மை செயலாளரான கவுரவ் குப்தா ஐஏஎஸ் விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நடிகை ரன்யா ராவ் துபாயில் இருந்து தங்கம் கடத்தி வருவது தொடர்பாக ஏற்கனவே வருவாய் புலனாய்வு இயக்குனரகம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

இந்த விசாரணையின் போது முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. 

ப்ரோட்டாக்கால் என அழைக்கப்படும் விவிஐபி ட்ரீட்மெண்ட் விமான நிலையத்தில் பெறப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் எனவும், இந்த விவகாரத்தில் யார் விவிஐபி என்ன வழிமுறைகள் கடைபிடிக்கப்பட்டது.

இவருக்கு ப்ரோட்டாக்கால் வழங்கியது யார்? முறைகேடு எப்படி நடந்தது? டிஜிபி-க்கு தொடர்பு உள்ளதா என விசாரணை நடத்த கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், இந்த விசாரணையை உடனடியாக தொடங்கி, ஒரு வாரத்திற்குள் அரசுக்கு அறிக்கை அளிக்கவும், விமான நிலைய மரியாதை சேவைகள் எப்படி தவறாக பயன்படுத்தப்பட்டன என்பதையும் விசாரிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.