40 ஆண்டுகளுக்கு பிறகு செல்லும் ஒரே பிரதமர் மோடி!
குண்டுகள் முழங்க உற்சாக வரவேற்பு

40 ஆண்டுகளுக்கு பிறகு செல்லும் ஒரே பிரதமர் மோடி!
சவுதி அரேபியாவுக்கு பிரதமர் மோடி சென்றுள்ள நிலையில் அவருக்கு அந்நாட்டு அரசாங்கம் சார்பில் வழங்கப்பட்ட வரவேற்பு உலக நாடுகள் மத்தியில் உற்று நோக்க வைத்துள்ளது.
40 ஆண்டுகளுக்குப் பிறகு ஜெட்டாவுக்கு வருகை தரும் முதல் இந்தியப் பிரதமர் மோடிக்கு ஜெட்டாவிற்கு செல்லும் வழியில் மரியாதையின் அடையாளமாக சவுதி அரேபிய போர் விமானங்கள் பிரதமர் மோடியின் விமானத்திற்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் முன்னும் பின்னும் அணிவகுத்து வட்டமிட்டு மரியாதை செலுத்தின... பின்னர் குண்டுகள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இது ஒரு அரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
பின்னர், ஷேக் 'ஏ வதன்' பாடலைப் பாடி மோடியை வரவேற்றார்.
2 நாள் பயணமாக அவூதி அரேபியா செல்லும் பிரதமர் மோடி சவூதி இளவரசர் முகமது சல்மான் உள்ளிட்டோரை சந்திக்கிறார்.
வர்த்தகம், முதலீடு உள்பட பல்வேறு துறைகளில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.
மேலும், இந்தியா குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.