மனித வாழ்வுக்கான உன்னதப் போதனைகள் – காஞ்சி மஹாபெரியவர் உபதேசங்கள் | Kanchi Maha Periyava

#KanchiMahaPeriyava #MahaPeriyava #KanchiPeriyava #PeriyavaQuotes #PeriyavaUpadesam #SanatanaDharma #HinduSpirituality #DivineWisdom #SpiritualQuotes #PeriyavaTeachings #HinduGuru #SageOfKanchi #PeriyavaMahimai #Hinduism #SpiritualGuidance #DailySpiritualQuotes #Motivation #Inspiration #PeriyavaBlessings #FaithAndDevotion

Aug 19, 2025 - 19:28
Aug 19, 2025 - 19:34
 8
மனித வாழ்வுக்கான உன்னதப் போதனைகள் – காஞ்சி மஹாபெரியவர் உபதேசங்கள் | Kanchi Maha Periyava

மனித வாழ்வுக்கான உன்னதப் போதனைகள் – காஞ்சி மஹாபெரியவர் உபதேசங்கள்

  • எலிக்கு தினமும் பல் வளரும். அதனால் எதிலாவது பல்லைத் தேய்த்து குறைத்து கொள்ளும். அதுபோல பகவான் நாமத்தைச் சொல்லி மனதிலுள்ள தீயஎண்ணத்தை குறைக்க வேண்டும்.
  • நாக்கு தான் முதல் எதிரி. அது கேட்பதை எல்லாம் சாப்பிட்டால் உடல்நலம் கெடும்.
  • இலவசமாக எதையும் வாங்குவதில்லை; பிறரிடம் கடுமையாக நடப்பதில்லை என மனதில் உறுதி கொள்ளுங்கள்.
  • கட்டுப்பாடற்ற பேச்சு வீண் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.
  • சிரமம் வந்தால் தான் கடவுளை வணங்குவது என நினைக்கக் கூடாது.
  • நான், எனது என்னும் சுயநல சிந்தனைகளை கைவிட்டால் வாழ்வு சிறக்கும்.
  • செயலில் மட்டும் ஈடுபடு. அதற்கான காரண காரியத்தை கடவுள் புரிய வைப்பார்.
  • தானம், வழிபாடு, திருத்தல யாத்திரை என புண்ணியத்தை தேடுங்கள்.
  • வெளித்தோற்றம் அழகாக இல்லாவிட்டாலும் நற்பண்புகளால் அழகாக மாற முடியும்.
  • சம்பாதிக்கும் பணத்தை தர்ம வழியில் செலவழித்தால் பாவம் தீரும்.
  • அறிவு, அழகு, செல்வம் ஆகியவற்றால் மனிதன் கர்வப்படக் கூடாது.
  • உடுத்தும் உடையின் அளவை மனிதன் நிர்ணயிக்கிறான். ஆனால் மனிதனின் ஆயுளை கடவுள் நிர்ணயிக்கிறார்.
  • பழி தீர்க்கும் எண்ணம், பொறாமையை மனதை விட்டு துாக்கி எறியுங்கள்.