பிரமாண்டமாக நடைபெறும் ஏற்பாடு… 100 அடி கொடிக்கம்பம் சாய்ந்து விபத்து!

மாநாட்டு திடலில் விபத்து

Aug 20, 2025 - 15:37
Aug 20, 2025 - 15:39
 3
பிரமாண்டமாக நடைபெறும் ஏற்பாடு… 100 அடி கொடிக்கம்பம் சாய்ந்து விபத்து!

பிரமாண்டமாக நடைபெறும் ஏற்பாடு… 100 அடி கொடிக்கம்பம் சாய்ந்து விபத்து!  

மதுரை பாரப்பத்தியில் நாளை மாலை நடைபெறும் தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  

ஜே.சி.பி மற்றும் கிரேன் உதவியுடன் கொடிக்கம்பத்தை நடும் பணி தற்போது தொடங்கி நிலையில் 100 அடி கொடிக்கம்பம் சாய்ந்து விபத்துக்குள்ளானது.

கொடிக்கம்பம் சாய்ந்து கார் நொறுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.  

மாநாடு நடைபெறும் மதுரை பாரபத்திக்கு தவெக தலைவர் விஜய் வந்தடைந்தார்.  

மாநாட்டில் பங்கேற்க உள்ள தொண்டர்களுக்காக 1.50 லட்சம் நாற்காலிகள் போடப்பட்டிருக்கிறது.

தொண்டர்களுக்காக 5 லட்சம் SNAKCS பாக்கெட்டுகளில் பிஸ்கட், மிக்ஸர், தண்ணீர் பாட்டில்கள் சிறிய டாடா குளுக்கோஸ் உள்ளிட்டவை தயாராகி வருகின்றன.

மாநாடு நடைபெறும் இடத்திற்கு தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு தொகுதிகளில் இருந்து உற்சாகத்துடன் முன்கூட்டியே வருகை தரும் தொண்டர்கள்.

பரபரப்பான மதுரையில் தவெக மாநாட்டு திடலில் இன்றே கலைகட்டிய மக்கள் கூட்டம்.

மேலும் மாநாட்டிற்கு வரும் வாகனங்களுக்கு பல்வேறு வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது. 

மாநாட்டில் கலந்துகொள்ள லட்சக்கணக்கான மக்கள் வரக்கூடும் என்பதால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.