அமெரிக்காவில் 10 ஆயிரம் பக்தர்களுடன் முழுமையான பகவத் கீதை பாராயணம் … | Sri Ganapathy Sachchidananda Swamiji
#sriganapathysachchidanandaswamiji #sachchidanandaswamiji #sachchidanandaswamijispeech #divotional #divotionalsong #bhaktisong #sriganapathysachchidanandaswamijilive #devotionalspeech #devotionalsongs #hanuman #ganesh #sriganapathysachchidanandaswamijisong #channel5bhakti

அமெரிக்காவில் 10 ஆயிரம் பக்தர்களுடன் முழுமையான பகவத் கீதை பாராயணம் …
அமெரிக்காவில் அவதூத தத்த பீடம் மற்றும் எஸ்ஜிஎஸ் கீதை அறக்கட்டளை இணைந்து பத்தாயிரம் பக்தர்களுடன் ஆன்மீகத்தை பரப்பி வரும் நிலையில் முழுமையான பகவத் கீதை பாராயணம் நிகழ்ச்சி நடைபெற்றது.
கடந்த 65 ஆண்டுகளாக, பரப பூஜ்ய ஸ்ரீ கணபதி சச்சிதானந்த சுவாமிஜி உலகம் முழுவதும் ஆன்மீகத்தை அயராது பரப்பி வருகிறார், அனைவருக்கும் அந்த சக்தியையும் பக்தியையும் இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளிலும் பல தெய்வக் கோயில்களைக் கட்டி, நமது பண்டைய மரபுகளைப் பாதுகாத்து லட்சக்கணக்கான மக்களுக்கு மந்திரங்களை வழங்கி அவர்களின் வாழ்க்கையில் ஆன்மீக முன்னேற்றத்தை வழங்கியுள்ளார் ஸ்ரீ சுவாமிஜி.
ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவால் மனிதகுலத்திற்கு வழங்கப்பட்ட பகவத் கீதையை ஸ்ரீ சுவாமிஜி உலகம் முழுவதும் உள்ள எண்ணற்ற பக்தர்களுக்கு பரப்பி, அவர்களின் வாழ்க்கைப் பாதையை சீராக்குகிறார். இவ்வாறு, பூஜ்ய சுவாமிஜி காட்டிய வழியில் பலர் பகவத் கீதையை மனப்பாடம் செய்து தங்கள் வாழ்க்கையில் மாற்றத்தைக் காண்கிறார்கள்.
நமது சனாதன தர்மத்தின் மூலம் இணக்கமான சமூகத்தை உருவாக்கவும், ஆன்மீகத்தை வலுப்படுத்தவும் அயராது பாடுபடும் மகா ஞானி, அவதூத பூஜ்ய ஸ்ரீ கணபதி சச்சிதானந்த மகாஸ்வாமிஜி. இது தவிர, கடந்த 10 ஆண்டுகளாக, ஸ்ரீ சுவாமிஜி அமெரிக்காவில் பகவத் கீதையை பரவலாக விளம்பரப்படுத்தி வருகிறார்.
கடந்த ஆண்டு போலவே, இந்த ஆண்டும், அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள டல்லாஸ் ஃபிரிஸ்கோவில் உள்ள ஆலன் ஸ்டேடியத்தில் பத்தாயிரம் பக்தர்களுடன் ஒரு முழுமையான பகவத் கீதை பாராயண நிகழ்ச்சி சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பக்தர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பகவத் கீதையை ஓதினர்.
அமெரிக்காவில் மிக பிரமாண்டமான முறையில் நடந்த நிகழ்ச்சியை தேசிய ஊடகங்கள் சிறப்பாக மக்கள் மத்தியில் கொண்டுபோய் சோ்த்தது. இந்த நிகழ்ச்சி ட்விட்டரில் சுமாா் 40 கோடிக்கும் அதிகமாக ட்ரெண்ட் ஆனது. லட்சக்கணக்கான மக்கள் ட்வீட் செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பிரபலமான யூடியூப் சேனல்கள் மற்றும் ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங்க அதிகாரப்பூர்வ சேனலும் பாஞ்சஜன்யத்தை ஒளிபரப்பியது முலம் மக்கள் பக்தி வெள்ளத்தில் பக்தி பரவசம் அடைந்தனா்