அன்புமணி மீது நடவடிக்கை பாயுமா? – பாமகவினர் கேள்வி
கொஞ்சம் கால அவகாசம் கொடுக்கலாம்

அன்புமணி மீது நடவடிக்கை பாயுமா? – பாமகவினர் கேள்வி
பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு அனுப்பிய நோட்டீசுக்கு அன்புமணி ராமதாஸ் பதிலளிக்காத நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
உடல்நிலை காரணமாக ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில் கௌரவத் தலைவரான ஜி.கே மணி பங்கேற்கவில்லை.
பாமக கட்சி விதிகளை முறைகளை மீறியாக கூறி அன்புமணி ராமதாஸுக்கு 16 கேள்விகள் எழுப்பி விளக்கமளிக்க ஆகஸ்ட் 31 வரை காலக்கெடு விதிக்கப்பட்டது. அன்புமணி விளக்கமளிக்க கொடுக்கப்பட்டிருந்த காலக்கெடு முடிவடைந்த நிலையில் நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்பட்டது.
எனவே, தபால் மூலம் அன்புமணியின் பதில் பெறப்படுவதால் காலதாமதம் ஆகலாம் இன்னும் கொஞ்சம் கால அவகாசம் கொடுக்கலாம் என நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதனால், உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்ற ராமதாஸ் நடவடிக்கை குறித்து 2 நாள் கழித்து செப்டம்பர் 3ம் தேதி பேசலாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
எனவே, செப்.4ம் தேதி அன்புமணி மீதான நடவடிக்கை எடுக்கப்படுமா அல்லது மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்படுமா என கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்