விலை குறையவில்லை என்றால் – சீமான் எச்சரிக்கை

விலையேற்றம் கட்டுக்கடங்காமல் உள்ளது

Sep 1, 2025 - 17:28
 54
விலை குறையவில்லை என்றால் – சீமான் எச்சரிக்கை

விலை குறையவில்லை என்றால் – சீமான் எச்சரிக்கை

டோல்கேட் கட்டண கொள்ளையை மத்திய அரசு உடனடியாக கட்டுப்படுத்தவில்லை என்றால் தமிழ்நாடு முழுவதுமுள்ள அனைத்து சுங்கச்சாவடிகளையும் நாம் தமிழர் கட்சி முற்றுகையிடும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தொடர்ந்து, எந்த சுங்கச்சாவடியிலும் கட்டணம் வசூலிக்க முடியாத நிலையை உருவாக்குவோம் எனவும் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்ந்து, இது குறித்து பேசிய அவர், பெட்ரோல், டீசல் போன்ற வாகன எரிபொருட்களின் விலை ஏற்கனவே பலமுறை உயர்த்தப்பட்டுள்ளது.

அதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் கட்டுக்கடங்காமல் உள்ளது.
இந்த நிலையில், சுங்கக் கட்டணங்களையும் மீண்டும் உயர்த்துவது, மக்களின் வாழ்வாதாரத்தில் பொருளாதாரப் போர் தொடுக்கப்பட்டதற்குச் சமம்.

மக்களின் உணர்வுகளை அலட்சியப்படுத்தி, சுங்கக் கட்டணத்தை உயர்த்தும் மத்திய பாஜக அரசின் செயல்முறை துளியும் மனச்சான்றற்ற கொடுங்கோல் ஆட்சியின் வெளிப்பாடு எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

50 கிலோமீட்டருக்கொரு சுங்கக் கட்டணம் செலுத்தும் நிலை இந்தியாவில் மட்டுமே நிலவுகிறது.

மக்களின் உழைப்பைச் சுரண்டி கொள்ளை நடத்தும் தனியார் சுங்க நிறுவனங்களை மத்திய அரசு உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.