நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு குறைந்த விலைகள்… இனி யோசிக்காம பொருட்கள வாங்கலாம்!
ஆயிரக்கணக்கான ரூபாயை சேமிக்க முடியும்

நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு குறைந்த விலைகள்… இனி யோசிக்காம பொருட்கள வாங்கலாம்!
சிறிய ரக கார்கள், பைக், டி.வி., ஏ.சிக்கு ஜிஎஸ்டி அதிரடி குறைப்பு இரண்டு அடுக்குகளாக மாற்றப்பட்ட ஜி.எஸ்.டி புதிய விகிதம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
பைக், டிவி, ஏ.சி உள்ளிட்ட பொருட்களின் விலை குறைந்து, ஆயிரக்கணக்கான ரூபாயை சேமிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நெய், பால்பொருட்கள் உள்ளிட்ட மளிகைப் பொருட்கள், பற்பசை, பிரஷ், சோப்பு உள்ளிட்ட தினசரி அத்தியாவசியப் பொருட்கள் வாங்கும்போது 13 சதவீதம் வரையிலும், ஆடை மற்றும் காலணிகள் வாங்கும்போது 7 சதவீதம் வரையிலும் இனி சேமிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.
மருத்துவம் மற்றும் ஆயுள் காப்பீட்டில் 18 சதவீதம் வரையிலும், மருந்துப் பொருட்களில் 7 முதல் 12 சதவீதம் வரையிலும் சேமிக்க முடியும். எழுதுபொருட்களில் 7 சதவீதம் வரையிலும் இனி சேமிக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ரத்து 800 சிசி வரையிலான டிராக்டர்கள் வாங்கும்போது இனி 40 ஆயிரம் ரூபாய் வரையிலும், ஆயிரத்து 500 சிசி வரையிலான சிறிய ரக கார்கள் வாங்கினால் 70 ஆயிரம் ரூபாய் வரையிலும் சேமிக்க முடியும்.
350 சிசி கொண்ட பைக் மற்றும் ஸ்கூட்டர்கள் வாங்கினால் 8 ஆயிரம் ரூபாய் வரையிலும், தொலைக்காட்சிப் பெட்டி வாங்கினால் 3 ஆயிரத்து 500 ரூபாயும்,
ஏ.சி வாங்கினால், 2 ஆயிரத்து 800 ரூபாய் வரையிலும் சேமிக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.