விஜய் சினிமாவில் பேசுவது போல வசனம் பேசுகிறார், ஆனால் அடிப்படை அரசியல் தெரியவில்லை – அப்பாவு
என்ன கொள்கை இருக்கிறது?

விஜய் சினிமாவில் பேசுவது போல வசனம் பேசுகிறார், ஆனால் அடிப்படை அரசியல் தெரியவில்லை – அப்பாவு
நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சபாநாயகர் அப்பாவு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து ஆட்சியில் இருப்பதை மாற்ற முயற்சி செய்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் யார் என்று உங்களுக்கு தெரியும். அவர்களிடம் என்ன கொள்கை இருக்கிறது? யாருக்காக அவர்கள் வருகிறார்கள் என்று கேட்கிறேன்.
விஜய் சினிமாவில் பேசுவது போல, 'சிஎம் அங்கிள்', 'சிஎம் சார்' என்கிறார். அவருடைய பேச்சில் கொஞ்சம் அகந்தை அதிகமாக இருக்கிறது. அந்த அகந்தை இருக்கக்கூடாது. அது எந்த தைரியத்தில் வருகிறது என்று தெரியவில்லை.
நான் ஒரு தேர்தல் பிரசாரத்துக்கு வந்தால், எனக்கு இவ்வளவு கட்டுப்பாடுகளை போலீஸ் விதிக்கிறது. ஆனால், பிரதமர் மோடிக்கோ, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கோ இப்படி கட்டுப்பாடுகள் விதித்துப் பாருங்கள் என்று விஜய் முதல்வரைக் கேட்கிறார்.
விஜய்க்கு அரசியல் அடிப்படை தெரியவில்லை என்று நினைக்கிறேன். பிரதமருக்கான பாதுகாப்பு நெறிமுறைகள் புரோட்டோகால் என்ன? உள்துறை அமைச்சரின் நெறிமுறைகள் என்ன? முதல்வருக்கான நெறிமுறைகள் என்ன? இவருடைய நெறிமுறைகள் என்ன?
பிரதமர், உள்துறை அமைச்சர், முதலமைச்சர் ஆகியோரைப் பற்றிப் பேசும்போது, கண்ணிய குறைவான வார்த்தைகளை தவிர்க்க வேண்டும். 'மாண்புமிகு முதலமைச்சர்', 'மாண்புமிகு பிரதமர்', 'மாண்புமிகு உள்துறை அமைச்சர்' என்று தான் அழைக்க வேண்டும். சினிமாவில் பேசுவது போல டயலாக் பேசுவதை மக்கள் விரும்புவதில்லை. இப்படி சிறுபிள்ளைத்தனமாக ஏன் பேசுகிறார்கள்?" என்று தெரிவித்தார்.