Jana Nayagan First Single | தளபதி விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தின் முதல் பாடல் தீபாவளிக்கு ரிலீஸ்? Jana Nayagan | Thalapathy Vijay

Sep 23, 2025 - 13:26
 108

தளபதி விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இயக்குநர் ஹெச். வினோத், "இது பக்கா மாஸ் படம், விஜய் ரசிகர்களுக்கு முழு விருந்து" என்று கூறியது படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது.

விஜய்யுடன் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, ப்ரியாமணி, பாபி தியோல், நரேன், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்து வரும் இப்படம், அடுத்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், படத்தின் முதல் பாடல் குறித்த ஒரு சுடச்சுட செய்தி வெளியாகியுள்ளது. அனிருத் இசையில், தளபதி விஜய்யின் குரலில் ஒரு மாஸ் பாடல் தயாராகியுள்ளதாம். இந்த பிரம்மாண்டமான பாடலை வருகிற தீபாவளியை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய்யின் படங்களில் முதல் பாடல்களுக்கு எப்போதும் பெரிய வரவேற்பு இருக்கும். அதுவும் அவரது கடைசி படத்தின் முதல் பாடல் என்பதால், இது ஒரு மிகப்பெரிய கொண்டாட்டமாக அமையும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.