முதல்வருக்கு கோரிக்கை வைத்த அண்ணாமலை | Annamalai | MK Stalin

Sep 23, 2025 - 14:28
 54
முதல்வருக்கு கோரிக்கை வைத்த அண்ணாமலை |  Annamalai | MK Stalin

முதல்வருக்கு கோரிக்கை வைத்த அண்ணாமலை | Annamalai | MK Stalin

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில், பாதாள சாக்கடையைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு தூய்மைப் பணியாளர்கள், விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளனர். 

தமிழகத்தில், போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாமல், கையுறை கூட வழங்கப்படாமல், தூய்மைப் பணியாளர்கள் சாக்கடையைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்படுவதால். விஷவாயு தாக்கி உயிரிழக்கும் தூய்மைப் பணியாளர்கள் எண்ணிக்கையில்,  இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடத்தில் இருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும், சுமார் 50 பேர் தமிழகத்தில் உயிரிழந்துள்ளனர்.  தமிழக அரசு தூய்மைப் பணியாளர்களுக்கு, போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும்  பல்வேறு அமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்

சென்னை ஐஐடி மாணவர்கள், தூய்மைப் பணியை மேற்கொள்ள, ஹோமோசெப் மற்றும் சிப்பாய் ஆகிய இரண்டு ரோபோக்களைக் கண்டுபிடித்துள்ளனர். ஆனால், தமிழக அரசு பல ஆண்டுகள் கடந்தும் இரண்டு ரோபோக்களை பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை.

இது குறித்து பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது xதளத்தில் தெரிவிக்கையில்

தனது தந்தைக்குச் சிலை வைக்க, மக்கள் வரிப்பணத்தைச் செலவு செய்து, உச்சநீதிமன்றத்தில்  மேல்முறையீடு  செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நேரமும் நிதியும் இருக்கிறது. தூய்மைப் பணியாளர்களுக்குத் தேவையான கருவிகள் வாங்க நிதி இல்லையா? 

சமூகநீதி என்று உதட்டளவில் பேசி நாடகமாடும் திமுக அரசு, இனியாவது தூய்மைப் பணியாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்யுமா? - அண்ணாமலை