சந்திசிரிக்கும் சட்டம் – ஒழுங்கு…. குற்றவாளிகளுக்கு முட்டுகொடுக்கும் திமுக! - எடப்பாடி பழனிச்சாமி
தமிழகத்தை தலைகுனிய வைத்துவிட்டார்
சந்திசிரிக்கும் சட்டம் – ஒழுங்கு…. குற்றவாளிகளுக்கு முட்டுகொடுக்கும் திமுக! - எடப்பாடி பழனிச்சாமி
தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சந்திசிரிக்கும் வேளையில், காவல்துறை என்ற ஒன்று செயல்படுகிறதா? திமுகவின் காட்டாட்சி தர்பார் இன்றுவரை தமிழக மக்களை வாட்டி வதைத்து வருகிறது.
திறனற்ற ஆட்சி மற்றும் சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டில் தமிழகத்தை தலைகுனிய வைத்துவிட்டார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்.
தமிழகத்தில் குற்றவாளிக்கு சட்டத்தின் மீதோ, காவல்துறை மீதோ எந்த அச்சமும் இல்லை.
தற்காலிக டிஜிபி-ஐ நியமித்து அரசியல் சாசன சட்டத்தை புதைத்துவிட்டு செயல்படும் ஃபெயிலியர் மாடல் விடியா திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.
கொலை, கொள்ளை, பாலியல்,போதைப்பொருள், கடத்தல் உள்ளிட்ட அனைத்துக் குற்ற நிகழ்வுகளிலும், குற்றவாளிகளுடன் திமுக நிர்வாகிகள் கைக்கோர்த்துள்ளனர்.
தங்களது குற்றங்களில் சம்பந்தப்பட்ட திமுக நிர்வாகிகளைக் காப்பாற்ற உச்சநீதிமன்றம் வரை சென்று போராடும் விடியா அரசு திமுக என எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
