அமித்ஷாவின் அடுத்த மூவ்… சம்பந்தப்பட்டவர்கள் அதிரடி கைது!
1000 போலீசார் அதிரடி சோதனை
அமித்ஷாவின் அடுத்த மூவ்… சம்பந்தப்பட்டவர்கள் அதிரடி கைது!
செங்கோட்டை கார் வெடிப்பு சம்பவத்தை அடுத்து மத்திய அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
கார் வெடிப்பு நிகழ்வு பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில் ஆலோசனை.
உள்துறைச் செயலாளர், உளவுத்துறை இயக்குநர், என்.எஸ்.ஜி இயக்குநர், டெல்லி காவல் ஆணையர் பங்கேற்றுள்ளனர்.
ஹரியானாவின் ஃபரிதாபாத் – ன் முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
சுமார் 1000 போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் தீவிரவாத செயல்கள் நடைபெற்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
கார் வெடிப்பில் காரை ஓட்டி சென்றதாக கூறப்படும் மருத்துவர் உமரின் புகைப்படங்கள் வெளியானது.
வெடித்து சிதறிய காரில் உமர் மட்டுமே இருந்திருக்கலாம் என காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர்.
காரை ஓட்டி சென்றதாக கூறப்படும் மருத்துவர் உமர் காஷ்மீரை சேர்ந்தவர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
உமரின் தாய் மற்றும் சகோதரர்களை காஷ்மீரில் வைத்து கைது செய்தது காவல்துறை.
