அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவி?...டெல்லி தலைமை சொல்வது என்ன?
தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அண்ணாமலை விருப்பம்

அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவி?...டெல்லி தலைமை சொல்வது என்ன?
அதிமுக – பாஜக கூட்டணி உருவாக வசதியாக பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து விலக அண்ணாமலை முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திமுக – அதிமுகவுடன் இப்போதும் எப்போதும் கூட்டணி இல்லை என கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது அண்ணாமலை கூறி இருந்தார்.
பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து விலக முன்வந்துள்ள அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு வழங்குவது குறித்து மேலிடம் தீவிர பரிசீலனை மேற்கொண்டு வருகிறது.
அதிமுக-பாஜக கூட்டணி உருவாக எந்த இடையூறும் இருக்கக்கூடாது என்பதால் பாஜக மாநில தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அண்ணாமலை விருப்பம் தெரிவித்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
பாஜக மாநில தலைவர் பதவியிலிருந்து விலகுவதற்கு விருப்பம் தெரிவித்து கட்சி மேலிடத்திற்கு அண்ணாமலை தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
மாநில தலைவர் பதவியில் இருந்து விலகினாலும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவிற்கு களப்பணியாற்ற அண்ணாமலை முக்கியம் என பாஜக மேலிடம் கருத்து தெரிவித்துள்ளது.
தமிழக அரசியலில் அண்ணாமலை தொடர்ந்து ஆக்டிவாக இருக்க மத்திய அமைச்சர் பதவி வழங்குவது குறித்து பாஜக மேலிடம் பரிசீலிப்பதாககவும், 3 வருடங்களாக பாஜக வளர்ச்சிக்கு உழைத்த அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்து சட்டப்பேரவை தேர்தலில் பயன்படுத்திக் கொள்ள மேலிடம் திட்டம் வகுத்துள்ளது எனவும் கூறப்படுகிறது.