அரசியல் கட்சிகளுக்கு கிடுக்கிப்பிடி!
அரசியல் கட்சிகளுக்கு கிடுக்கிப்பிடி!
கூட்டத்தில் கூறப்பட்ட வழிகாட்டு நெறிமுறையின் முக்கிய அம்சங்கள்
அரசியல் கட்சி பொதுக்கூட்டங்கள், 'ரோடு ஷோ' உள்ளிட்ட பொதுமக் கள் கூடும் நிகழ்வுகளை திட்டமிட்டு முறைப்படுத்தி கண்காணிக்கும். கட்டமைப்பை உருவாக்கும் நோக்கத்தில் வெளியிடப்பட்ட அரசின் வரைவு முன்மொழிவு அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்
கள் வருமாறு:-
* மேடை பந்தலின் உறுதித்தன்மை, மின்சார உபகரணங்களின் பாதுகாப்பு குறித்த, மாவட்ட நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனி யார் பொறியாளரிடம் இருந்து சான்றிதழ் பெற்று கூட்டம் தொடங்கும் 4 மணி நேரத்திற்கு முன்பு போலீசிடம் அளிக்க வேண்டும். வருவாய் துறை, நகராட்சித் துறையின் விதிகளுக்கு உட்பட்டு கொடிக்கம்பம், டிஜிட்டல் பேனர்களை அமைக்க வேண்டும்.
* இடத்தின் கொள்ளளவை விட அதிக கூட்டம் கூடினால் தடுப்புகள், கயிறுகள் மூலம் கூட்டத்தினரை தனி இடத்திற்கு அமைப்பாளர்கள் ஒழுங்குபடுத்த வேண்டும்.
* கூட்டத்திற்கான அங்கீகரிக்கப்பட்ட இடங்களை அறிவித்து, எதிர் பார்க்கப்படும் மக்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப காப்புத் தொகை நிர்ணயிக்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட இடங்களை போலீஸ், அரசியல் கட்சிகளுடன் ஆலோசித்து கலெக்டர் அறிவிப்பார். அங்கீகரிக்கப்பட்ட இடத்தில் கூட்டம் நடத்த 10 நாட்களுக்கு முன்பாகவும், அங்கீகரிக்கப்படாத மாற்று இடத்திற்கு 21 நாட்களுக்கு முன்பதாகவும் மனு அளிக்க வேண்டும்.
* எதிர்பார்க்கும் கூட்ட அளவு, வாகனங்களின் எண்ணிக்கை, முக்கிய பேச்சாளர், வாகன நிறுத்த வசதி போன்றவற்றை குறிப்பிட்டு போலீசிடம் மனு அளிக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட இடத்தின் கொள்ளளவுக்குள் கூட்டம் இருந்தால் அந்த இடத்தை குறிப்பிட வேண்டும்.
* 5 நாட்களுக்கு முன்பு அனுமதி வழங்கப்படும். அனுமதி கிடைக்காவிட்டால் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்வேண்டும்
* கூட்டத்தினரை கட்டுப்படுத்த கேமராக்கள், ஒலிபெருக்கி கருவிகளை வைத்து அறிவுரை வழங்க வேண்டும். ஜெனரேட்டருடன் போதிய ஒளி வசதி செய்யப்பட வேண்டும்.
* மாவட்ட கலெக்டர், மாவட்டம் மற்றும் வட்ட அளவில் பாதுகாப்பு கண்காணிப்பு குழுக்களை அமைக்க வேண்டும்.
* குறிப்பிட்ட நேரத்திற்குள் கூட்டம் நடத்துவது, பாதுகாப்பு, தனியார் சொத்து சேதம் இழப்பீடு, ஆம்புலன்ஸ் போக்குவரத்து வசதி, கர்ப்பிணி, வயதானோர், மாற்றுத்திறனாளிக்கு தனியிடம் போன்றவற்றிற்கு எழுத்துப்பூர்வ உறுதிமொழி அளிக்க வேண்டும்.
* மரபுப்படி வரையறுக்கப்பட்ட இடத்தில் நடத்தப்படும் மத வழிபாடு போன்ற நிகழ்ச்சிகளுக்கும், அரசு சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும் இது பொருந்தாது.
* தேவைப்பட்டால் அதிகாரிகள் இந்த வழிகாட்டு நெறிமுறையில் திருத்தம் செய்யலாம், கூடுதல் நிபந்தனைகளை சேர்க்கலாம்.
* ரோடு ஷோவில் நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே உரையாற்ற வேண்டும்.
* சிறப்பு அழைப்பாளரின் வாகனத்தை பின்தொடர்வதை தவிர்க்க வேண்டும்.
* ஆண், பெண்கள் என 500 பேருக்கு ஒன்று என்ற வீதத்தில் கழிவறை, 100 மீட்டர் இடைவெளியில் குடிநீர் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்.
* 100 பேருக்கு ஒரு தன்னார்வலர் நியமிக்கப்பட வேண்டும். ஆபத்து வரையறை நிர்ணயம் செய்யப்பட்டு அதிகபட்சமாக 200 பேருக்கு ஒரு காவலர், குறைந்தபட்சமாக 50 பேருக்கு ஒரு காவலர் நியமிக் கட்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளன.
