பிரபல சீரியல் நடிகர் தினேஷ் கைது!

பண மோசடி

Nov 13, 2025 - 16:01
 3
பிரபல சீரியல் நடிகர் தினேஷ் கைது!

பிரபல சீரியல் நடிகர் தினேஷ் கைது!

பண மோசடி புகாரில் பிரபல சீரியல் நடிகர் தினேஷ் பணக்குடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வள்ளியூர் அருகே உள்ள தண்டையார்குளத்தை சேர்ந்த கருணாநிதி என்பரிடம் பண மோசடி செய்ததாக புகார் எழுந்தது. 

பணத்தை திருப்பி கேட்ட போது கருணாநிதி என்பரை தினேஷ் தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

2022ம் ஆண்டு கருணாநிதி தன்னுடைய மனைவிக்கு வேலை தேடி வருவதாக தினேஷிடம் கூறியுள்ளார்.

தினேஷ் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை வாங்கி தருவதாகவும் அங்கு தெரிந்தவர்கள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 3 லட்சம் முன்பணமாக வாங்கியுள்ளார்.

இதனையடுத்து பணம் வாங்கி 3 வருடங்கள் ஆகியும் வேலை வாங்கி தராததால் நேரில் சென்று பணத்தை திரும்ப கேட்டுள்ளார் கருணாநிதி.

தினேஷ் மற்றும் அவரது தந்தை இருவரும் கருணாநிதியை காரில் அழைத்து சென்று சாத்தான்குளம் அருகே தனியே வைத்து தாக்கியுள்ளனர்.

கருணாநிதி புகார் கொடுத்ததன் பேரிலும், தாக்குதலின் அடிப்படையிலும் தினேஷ் மற்றும் அவரது தந்தை மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறை கைது செய்துள்ளனர்.