எனக்காவது 2 அரை ஆண்டுகள் இருக்கிறது…. அமைச்சர் சேகர் பாபுவுக்கு 2 மாதங்கள் தான் இருக்கிறது – நயினார் நாகேந்திரன்
தவெகவை குறைத்து மதிப்பிட்டதே இல்லை
எனக்காவது 2 அரை ஆண்டுகள் இருக்கிறது…. அமைச்சர் சேகர் பாபுவுக்கு 2 மாதங்கள் தான் இருக்கிறது – நயினார் நாகேந்திரன்
தவெகவை குறைத்து மதிப்பிடவில்லை என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தவெக இன்னும் ஒரு தேர்தலை கூட சந்திக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
தவெகவை நாங்கள் எப்போதும் குறைத்து மதிப்பிட்டதே இல்லை. அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தர பகைவனும் இல்லை.
எங்களுடைய பேச்சு எப்போதும் நாகரீகமாக தான் இருக்கும் இதுவரை அப்படித்தான் இருந்தது. எந்த இடங்களிலும் நாகரீகமில்லாமல் எங்களில் உள்ள யாரும் பேசியதில்லை. டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ்ஸை இணைப்பது குறித்து காலம் தான் முடிவு செய்யும். திமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸே கலந்துகொள்ளவில்லை. அமைச்சர் சேகர்பாபு சொல்வது உண்மைதான் பாஜகவில் 3 ஆண்டுகள் தான் பதவி.
ஒரு வேளை 3 ஆண்டுக்கு பின் பதவி நீட்டிக்கப்படலாம்.
எனக்கு 2 அரை ஆண்டுகள் பதவிக்காலம் இருக்கிறது ஆனால் சேகர்பாபுவுக்கு 2 மாதம் தான் பதவிக்காலம் உள்ளது எனவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
