கூட்டணியில் தவறு செய்து விட்டோம் – காங்கிரஸ்
கவர்னரை குறை சொல்வது சாதாரணமான விஷயம்
கூட்டணியில் தவறு செய்து விட்டோம் – காங்கிரஸ்
ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது தவறு என காங்கிரஸ் கூறியுள்ளது.
லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு எதிராக ஒன்று சேர்ந்த எதிர்க்கட்சிகள் ' இண்டியா' என்ற பெயரில் கூட்டணி அமைத்தன. இதில் டில்லியில் ஆளும் ஆம் ஆத்மியும், காங்கிரசும் இணைந்து போட்டியிட்டன. இருப்பினும் அக்கூட்டணி எதிர்பார்த்த வெற்றி பெற முடியவில்லை.
ஆனால். வரும் பிப்ரவரி மாதம் நடக்கும் என எதிர்பார்க்கப்படும் டில்லி சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என ஆம் ஆத்மி அறிவித்து,
இதனால் அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதேபோல், காங்கிரசும் தனித்து களமிறங்குகிறது.
இந்நிலையில், டில்லியில் ஆம் ஆத்மி அரசின் தோல்வி குறித்து அறிக்கை வெளியிட்டு காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அஜய் மாக்கன் கூறுகையில், கெஜ்ரிவாலை ஒரே வார்த்தையில் விவரிக்க வேண்டும் என்றால், அவரை 'பார்சிவால்(Farziwal)' எனக்கூறலாம் எனவும்,
டில்லியில் லோக்பால் அமைக்க கவர்னர் அனுமதி தரவில்லை என்றால், பஞ்சாபில் அமைக்கலாம். அங்கு அமைக்காதது ஏன்?
கவர்னரை குறை சொல்வது சாதாரணமான விஷயம். அங்கு லோக்பால் அமைப்பதில் உங்களை தடுப்பது எது? 10 ஆண்டுகளு்கு முன்பு லோக்பால் பெயரில் கட்சி ஆரம்பித்த கெஜ்ரிவால், தற்போது அதனை மறந்துவிட்டார் எனவும்,
டில்லியில் நிலை மோசமானதற்கும், காங்கிரஸ் பலவீனம் அடைந்ததற்கும் 2013ல் அக்கட்சி ஆட்சி அமைக்க ஆதரவு அளித்தது தான் காரணம் என கூறியுள்ளார்.
மேலும், இன்றைய டில்லியின் மோசமான நிலைக்கு இதுவே காரணம். மீண்டும் டில்லியில் காங்கிரஸ், ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைத்து அதேபோன்ற தவறை திரும்பச் செய்தது. இது சரி செய்யப்பட வேண்டும் என கூறியுள்ளார்.