ஸ்டாலினுக்கு சவால் விட்ட ஆதவ்; உங்களால முடியுமா….இல்ல, தெரியுமா?

மிகப்பெரிய பிரச்சாரத்தை தவெக நடத்தும் என்பது உறுதி

Dec 9, 2025 - 15:05
 2
ஸ்டாலினுக்கு சவால் விட்ட ஆதவ்; உங்களால முடியுமா….இல்ல, தெரியுமா?

ஸ்டாலினுக்கு சவால் விட்ட ஆதவ்; உங்களால முடியுமா…. இல்ல,தெரியுமா?

தமிழ்நாடு தான் காவல்துறையில் சட்டம் ஒழுங்கு சரி என்று சொல்லும் முதல்வர் புதுச்சேரி மாநில காவல்துறையை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என புதுச்சேரியில் ஆதவ் அர்ஜூனா பேசியுள்ளது சில தரப்பில் இருந்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவுக்கே புதுச்சேரி மாநில காவல்துறை ஒரு முன்னுதாரணமாக இருந்து வருகிறது.

புதுச்சேரியின் ஒட்டுமொத்த மக்களுக்கும், காவல்துறைக்கும், மாநில முதல்வருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

புதுச்சேரியில் கொடுத்த பாதுகாப்பை தமிழ்நாட்டில் இதுவரைக்கும் தவெக பயணத்திற்கு கொடுத்ததே கிடையாது.

எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கிய பிறகு தமிழகத்தை மட்டும் யோசிக்கவில்லை புதுச்சேரியை பற்றியும் யோசித்தார். தமிழகம் மட்டுமல்லாமல் புதுச்சேரிக்கும் பல்வேறு நல்ல திட்டங்களை வைத்துள்ளார் தவெக தலைவர் விஜய்.

தமிழக வெற்றிக் கழகம் மூலமாக அடுத்த 50 வருஷத்துக்கான புதுச்சேரியின் வரலாறு புதிதாக எழுதப்படும்.

கூடிய விரைவில் புதுச்சேரியில் ஒட்டுமொத்த மக்களும் கலந்து கொள்ளும் அளவுக்கு ஒரு மிகப்பெரிய பிரச்சாரத்தை தவெக நடத்தும் என்பது உறுதி என புதுச்சேரியில் ஆதவ் அர்ஜூனா பேசியுள்ளார்.