Thailand–Cambodia WAR: தாய்லாந்தின் தீவிர தாக்குதல் - கம்போடியாவில் 8 பேர் பலி
Thailand–Cambodia WAR: தாய்லாந்தின் தீவிர தாக்குதல் - கம்போடியாவில் 8 பேர் பலி
ஐக்கிய நாடுகள், நியூயார்க்: தாய்லாந்து மற்றும் கம்போடியா எல்லைப் பகுதியில் வெடித்திருக்கும் புதிய ஆயுத மோதல்களில் 8 பேர் உயிரிழந்ததை அடுத்து, ஐ.நா. பொதுச் செயலாளர் ஆண்டோனியோ குட்டெரெஸ் ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளார்.
அறிக்கைகளின் படி, எல்லையில் துப்பாக்கிச் சூடு, வெடிகுண்டுகள், மற்றும் விமானத் தாக்குதல்கள் நடந்துள்ளன. மோதலின் காரணமாக பல கிராமங்கள் காலியாகி, நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பிற்காக இடம்பெயர்ந்துள்ளனர்.
ஐநா வெளியிட்ட அறிக்கையில், இரு நாட்களும் அடக்கமும் பொறுமையும் கடைபிடித்து, நிலைமை மேலும் மோசமடையாமல் தடுப்பது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் பாதுகாப்பை முதன்மைப்படுத்தி, சமீபத்தில் கையெழுத்திடப்பட்ட சமாதான ஒப்பந்தத்தைக் கடைபிடிக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
நிபுணர்கள் எச்சரிக்கையில், இந்த புதிய மோதல் தென்கிழக்கு ஆசியாவில் பிராந்திய பதற்றத்தை அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
