மோடியின் அடுத்த தேர்தல் மூவ்; தயாரான அதிமுக எம்.எல்.ஏக்கள்!

அதிமுகவினருக்கு அழைப்பு விடுத்த மோடி

Dec 9, 2025 - 15:13
 1
மோடியின் அடுத்த தேர்தல் மூவ்; தயாரான அதிமுக எம்.எல்.ஏக்கள்!

மோடியின் அடுத்த தேர்தல் மூவ்; தயாரான அதிமுக எம்.எல்.ஏக்கள்!

நாளை மறுநாள் (டிச.11) தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பிக்களுக்கு விருந்தளிக்கிறார் பிரதமர் மோடி.

பிரதமர் அளிக்கும் விருந்தில் பங்கேற்க தம்பிதுரை உள்ளிட்ட அதிமுக எம்.பிக்களுக்கு பாஜக தலைமை அழைப்பு விடுத்துள்ளது.நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் சூழலில் கூட்டணி எம்.பிக்களுக்கு பாஜக சார்பில் விருந்து அளிக்கப்படுகிறது. 

கூட்டணி கட்சிகளிடையே வெளிப்படையான மற்றும் ஆக்கப்பூர்வமான கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொள்வதற்காக இந்த கூட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.  

கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளின் மூத்த அமைச்சர்கள், கட்சியின் மக்களவை மற்றும் மாநிலங்களவைக் குழு தலைவர்கள், எம்.பிக்கள் இந்த உரையாடலில் பங்கேற்பார்கள்.

மேற்கு வங்கம், தமிழ்நாடு, அசாம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் அதற்கான யுக்திகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.  

தேர்தல்களுக்கு முன்னதாக கூட்டணி கட்சிகள் தங்கள் அணுகுமுறைகளை மேம்படுத்திக் கொள்ளும்.

அடுத்த ஆண்டு ஜனவரியில், மேற்கு வங்கம் முழுவதும் 4 அல்லது 6 யாத்திரைகளை நடத்த கட்சி தயாராகி வருகிறது.