விஜய் பிள்ளையார் சுழி போட்டுவிட்டார்..... அரசியல் மாற்றம் உறுதி!

சமூக நீதிக்கான குரலாகவும் விஜய் இருப்பார்

Dec 9, 2025 - 15:50
 2
விஜய் பிள்ளையார் சுழி போட்டுவிட்டார்..... அரசியல் மாற்றம் உறுதி!

விஜய் பிள்ளையார் சுழி போட்டுவிட்டார்..... அரசியல் மாற்றம் உறுதி!

புதுச்சேரிக்கு இதுவரை உலக தலைவர்கள் எத்தனையோ பேர் வந்துள்ளனர் ஆனால் விஜய் வந்த போது வந்த கூட்டம் புதிய வரலாறு என தவெகவில் இணைந்த சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

விஜய் அரசியலுக்கு வந்தது தமிழகத்திலும், புதுச்சேரியிலும் மிகப்பெரிய மாற்றம் எனவும் விஜய் பின்னால் கோடான கோடி இளைஞர்கள் உள்ளனர் புதுச்சேரியிலேயே கட்டுக்கடங்காத கூட்டம் வந்திருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.  

தமிழகத்தில் ஊழல் மிகுந்த திமுக மற்றும் அதற்கு துணை போகின்ற பல கட்சிகள் இருக்கிறது.

ஊழலுக்கும், அரசியல் வாரிசுகள் மற்றும் ஒட்டுமொத்த மக்களுக்குமான ஆதரவாகவும், சமூக நீதிக்கான குரலாகவும் விஜய் இருப்பார்.  

புதுச்சேரியில் இன்னும் நிறைய பேர் விஜய்க்கு பின்னால் கட்சியில் இணையவும், சட்டமன்றம் செல்லவும் தயாராக உள்ளனர்.

ஊழல் இல்லாத இளைஞர் சமுதாயத்தை கொண்ட மிகப்பெரிய மாற்றத்தை விஜய் கொண்டு வருவார் எனவும் தெரிவித்துள்ளார்.