காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்!
அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டிடம் பணியினை கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்தவர் என்னுடைய இடம் என்று கூறி பணியினை நிறுத்தியதால் அப்பகுதி மக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 42 வது வார்டு அசோக் நகர் பகுதியில் கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது அதன் அருகே பொது சுகாதாரத் துறை சார்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஒரு கோடியே 20 லட்சம் மதிப்பில் கட்டிடம் கட்டுவதற்கான பணி துவங்கி உள்ளது.
அந்த இடம் எனக்கு சொந்தமான இடம் என்று கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்தவர் தனிநபர் பணியினை தடுத்து நிறுத்தி உள்ளார்.
பணியினை தடுத்து நிறுத்தியதால் அப்பகுதி பொதுமக்கள் அப்பகுதியை சேர்ந்த கவுன்சிலர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆரம்ப சுகாதார நிலையம் இதே இடத்தில் அமைப்பதற்கு கட்டிடம் கட்ட வேண்டும் என்று காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்தவர் இந்த இடத்தை எப்படி அவருடைய இடம் என்று கூறி வருவதை சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
காத்திருப்பு போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு நகராட்சி அதிகாரிகள் வருவாய்த்துறை அலுவலர்கள் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.