சிகிச்சைக்கு வந்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு…பல் மருத்துவர் போக்சோவில் கைது!

Jul 29, 2024 - 23:39
 9
சிகிச்சைக்கு வந்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு…பல் மருத்துவர் போக்சோவில் கைது!

புதுக்கோட்டை திருக்கோகரணம் பகுதியில்  தனியார் பல் கிளினிக் வைத்து நடத்தி வருபவர் அப்துல் மஜீத் வயது 37. இவரிடம் நேற்று தாயுடன் சேர்ந்து பள்ளி மாணவி ஒருவர் சிகிச்சை பெறுவதற்காக வந்துள்ளார்.

பள்ளி மாணவியை கண்டு சபலம் உற்ற பல் மருத்துவர் அப்துல் மஜீத் மாணவியின் தாயாரிடம் மருந்து சீட்டு எழுதிக் கொடுத்து பேருந்து நிலையத்தில் உள்ள மருந்து கடையில் இந்த மருந்தை வாங்கி வருமாறு கூறி அனுப்பி உள்ளார்.

இதனை தொடர்ந்து மருந்து சீட்டைப் பெற்றுக் கொண்டு மருந்து வாங்குவதற்காக மாணவியின் தாய் சென்று விட்டார்.

அந்த நேரத்தில் மருத்துவர் அப்துல் மஜீத் மாணவியரிடம் பாலியல் ரீதியான டார்ச்சருக்கு மாணவியை உள்ளாக்கியுள்ளார்.

மாணவி கூச்சலிட்டுக் கொண்டே வெளியே ஓடி வருவதற்கும் தாய் வருவதற்கும் நேரம் சரியாக இருந்தால் மாணவி பாலியல் தொந்தரவு  மருத்துவர் அளித்ததாக கதறி அழுது கொண்டே கூறியதை தொடர்ந்து கோபத்தின் உச்சிக்கு சென்ற மாணவியின் தாய் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தார் தகவலின் பேரில் காவல்துறை வந்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிப்பதற்காக மாணவி மற்றும் பெற்றோரை அழைத்துச் சென்றனர் அவர்கள் அளித்த புகாரின் பேரில் மருத்துவர் அப்துல் மஜீத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து  அவரை புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.