அமைச்சர் மிரட்டும் தொனியில் பேசுகிறார்….. செவிலியர்கள் குற்றச்சாட்டு!

நியாயம் கிடைக்கும் வரை போராட்டத்தை கையிலெடுப்போம்

Dec 19, 2025 - 16:06
 1
அமைச்சர் மிரட்டும் தொனியில் பேசுகிறார்….. செவிலியர்கள் குற்றச்சாட்டு!

அமைச்சர் மிரட்டும் தொனியில் பேசுகிறார்….. செவிலியர்கள் குற்றச்சாட்டு!

மிரட்டும் தொனியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுவதாக செவிலியர் சங்கம் குற்றச்சாட்டியுள்ளது.  

 

சென்னையில் செவிலியர்கள் சங்கத்தின் பொதுச் செயலர் சுபின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர்,  

உண்ணாவிரதம் இருந்த எங்களை கிளாம்பாக்கத்தில் கொண்டு சென்று விட்டனர். நிர்வாகிகளுடன் அலோசனை செய்த பிறகே அடுத்தகட்ட முடிவு எடுப்போம்.  

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலும் போராட்டம் நடத்தியதால் எங்களை கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர்.

பணி நிரந்தரம் செய்வதாக தேர்தல் வாக்குறுதி கொடுத்தனர் பல முறை கோரிக்கை வைத்தும் அதை நிறைவேற்றவில்லை. அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.  

இதனைத்தொடர்ந்து எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களது பேச்சுவார்த்தை திருப்தி அளிக்காத நிலையில் தான் போராட்டத்தை கையிலெடுத்துள்ளோம்.  

கூரப்பாக்கம் மண்டபத்தில் 730 செவிலியர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். உரிய நியாயம் கிடைக்கும் வரை போராட்டத்தை கையிலெடுப்போம் எனவும், எங்கள் நிர்வாகிகளிடம் ஆலோசனை மேற்கொண்ட பிறகு முடிவை அறிவிப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.