உட்கட்சிப் பிரச்சனைகள் மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்துகிறது – ஜோதிமணி
காங்கிரஸ் அழிவின் பாதையில் செல்கிறது
உட்கட்சிப் பிரச்சனைகள் மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்துகிறது – ஜோதிமணி
உட்கட்சி பிரச்சனைகளால் கட்சி கட்டுப்பாடற்று இருக்கிறது. ஒரு சிலரின் சுயநலத்தால் தமிழ்நாடு காங்கிரஸ் அழிவின் பாதையில் செல்கிறது என ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரசில் எந்தவித கட்டுப்பாடுமற்று தொடரும் உட்கட்சிப் பிரச்சனைகள் மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்துகிறது.
கரூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் நடக்கும் உட்கட்சி பிரச்சினைகள் குறித்து கடும் விமர்சனம் வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸில் எவ்வித கட்டுப்பாடும் இன்றி தொடரும் உட்கட்சிப் பிரச்சினைகள் மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்துகிறது.
ஒரு சிலரின் சுயநலத்திற்காக கட்சி கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் செல்கிறது.
