லெஃப்ட், ரைட் வாங்கிய சசிகலா…. பிளட் டெஸ்ட் எடுத்தா எல்லாம் தெரிஞ்சிடும்!

அமைச்சர் இப்படி சொல்லலாமா?

Jan 2, 2026 - 17:02
 9
லெஃப்ட், ரைட் வாங்கிய சசிகலா…. பிளட் டெஸ்ட் எடுத்தா எல்லாம் தெரிஞ்சிடும்!

லெஃப்ட், ரைட் வாங்கிய சசிகலா…. பிளட் டெஸ்ட் எடுத்தா எல்லாம் தெரிஞ்சிடும்!

தமிழகத்தில் கஞ்சா பயன்பாடு குறைந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதற்கு சசிகலா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

ஒரு சுகாதாரத்துறை அமைச்சர் இப்படி சொல்லலாமா? கைது செய்யப்பட்ட பசங்களுக்கு உடனே இரத்த பரிசோதனை எடுத்து பாருங்க.  

அரசு மருத்துவமனையில் மட்டும் சோதனை நடத்தாமல் தனியார் மருத்துவமனையிலும் சோதனை நடத்துங்கள்.

விஞ்ஞான உலகத்தில் கண்டுபிடிக்க முடியாது என்று எதுவுமே இல்லை.

ஒரு சுகாதாரத் துறை அமைச்சருக்கு இது நன்றாக தெரியும் அப்படி இருந்தும் இப்படி சொல்லலாமா?

இரத்த பரிசோதனையிலேயே என்ன சாப்பிட்டார்கள் என்ற அனைத்து விவரமும் வந்துவிடும்.