அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசிய மக்கள்! | Ponmudi

அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசிய மக்கள்!

Dec 3, 2024 - 13:00
Dec 3, 2024 - 13:26
 10
அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசிய மக்கள்! | Ponmudi

அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசிய மக்கள்!

திமுக அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்ட சம்பவம் திமுக அரசியல் களத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பெஞ்சல் புயலால் பல்வேறு மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன.

இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் திமுக அமைச்சர்கள் பார்வையிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது வன விலங்கு துறை அமைச்சராக இருக்கும் பொன்முடி விழுப்புரத்தில் மழையினால் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளையும் மக்களையும் பார்வையிட்டு வருகிறார்.

பொன்முடி மற்றும் அவரது மகனும், திமுக நிர்வாகிகளும், பொன்முடியின் உடனிருந்தனர். இந்த நிலையில் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நத்திக் கொண்டிருந்த பொன்முடி மற்றும் அவரது மகன் மீது சேற்றை வீசியுள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.