ஏமாற்றம் அடைந்த ட்ரம்ப்…. நோபல் பரிசை பெற்ற பெண் போராளி
அமைதிக்கான நோபல் பரிசு

ஏமாற்றம் அடைந்த ட்ரம்ப்…. நோபல் பரிசை பெற்ற பெண் போராளி!
அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா நாட்டைச் சேர்ந்த பெண் போராளி மரியா கொரொனா மச்சோடாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
2025-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் கடந்த 6ம் தேதி முதல் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு துறை வாரியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி இதுவரை மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் லட்சக்கணக்கான மக்களின் நலன் கருதி உலக அமைதிக்காக பாடுபட்ட நபர்களை தேர்ந்தெடுத்து வழங்கப்படும் உலகின் உயரிய விருதுகளுள் ஒன்றான அமைதிக்கான நோபல் பரிசு நார்வே நாட்டின் ஆஸ்லோ நகரில் இன்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி 2025ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசானது வெனிசுலா நாட்டைச் சேர்ந்த பெண் போராளியான மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
வெனிசுலா மக்களுக்கான ஜனநாயக உரிமைகளை மேம்படுத்துவதற்கும், சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்திற்கு ஒரு நியாயமான மற்றும் அமைதியான மாற்றத்தை அடைவதற்கான அவரது போராட்டத்திற்கும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக நோபல் கமிட்டி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 8 போர்களை நிறுத்தியதாக கூறி, அமைதிக்கான நோபல் பரிசை தனக்கு தர வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளிப்படையாக வலியுறுத்தி வந்த நிலையில், நோபல் கமிட்டி பெண் போராளியான மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.