தவெகவில் இணையும் முக்கிய புள்ளிகள்? செங்கோட்டையனின் மெகா ப்ளான்!
5 எம்.எல்.ஏக்கள் தவெகவில் இணைகின்றனர்
தவெகவில் இணையும் முக்கிய புள்ளிகள்?
விஜய் முன்னிலையில் தவஎகவில் இணையும் மாற்று காட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள்.
புதுச்சேரியை சேர்ந்த எல்.பெரியசாமி உட்பட 5 முன்னாள் எம்.எல்.ஏக்கள் தவெகவில் இணைகின்றனர்.
அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருவள்ளூர் தொகுதியின் அதிமுக மாவட்ட துணைச் செயலாளராக பணியாற்றி வந்த பாஸ்கரனும் இன்று தவெகவில் இணைகிறார்.
20க்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்கள் இன்று தவெகவில் விஜய் தலைமையில் இணைய உள்ளனர்.
தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் பல்வேறு இணைப்பு விழாக்களும், பேச்சுகளும் தொடங்கும் என தவெக அறிவிப்பு.
காங்கிரஸ் ஆதரவாளரான ராஜன் பர்னபாஸ் தனது ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைகிறார்.
மாற்று கட்சியினரை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைக்கும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது தவெக.
