ஸ்ட்ரிக்டா சொன்ன விஜய்… நுழைவு சீட்டு இல்லைன்னா வராதீங்க – விஜய்
தொலைக்காட்சியில் நிகழ்ச்சியை பார்த்துக்கொள்ளுங்கள்
ஸ்ட்ரிக்டா சொன்ன விஜய்… நுழைவு சீட்டு இல்லைன்னா வராதீங்க – விஜய்
தவெக தலைவர் விஜய்யின் சேலம் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தொடர்பாக தொண்டர்களுக்கு தவெக தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
நுழைவு சீட்டு பெற்ற 4998 பேருக்கு மட்டுமே மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி உண்டு. நுழைவு சீட்டு பெறாதவர்கள் யாரும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வரவேண்டாம்.
நிகழ்ச்சி முழுமைக்கும் அனுமதி பெற்றவர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கியூ ஆர் குறியீடுடன் கூடிய நுழைவுச்சீட்டு இருப்பவர் மட்டுமே வர வேண்டும் எனவும் அறிவுறுத்தல்.
சேலம் சீலநாயக்கன்பட்டியில் நாளை (12.02.2026) நடைபெற உள்ள தவெக நிகழ்ச்சி மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும்.
நுழைவுச்சீட்டு பெறாதவர்கள் வீட்டில் இருந்தபடியே தொலைக்காட்சியில் நிகழ்ச்சியை பார்த்துக்கொள்ளுங்கள்.
மேலும், அனுமதி இல்லாவதவர்கள் வருவதை தவிர்த்துக் கொண்டு அசம்பாதங்களுக்கு இடம் கொடுக்காமல் இருக்க வேண்டும் என தவெக தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
