ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டுக்கு ஒத்து வராது - ஸ்டாலின்
திட்டமிட்டு சதி செய்கிறார்கள்
ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டுக்கு ஒத்து வராது - ஸ்டாலின்
ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டுக்கு ஒத்து வராது இது எங்களுக்கும் தெரியும், அவர்களுக்கும் தெரியும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த இடையில் சிலர் திட்டமிட்டு சதி செய்கிறார்கள்.
திராவிட மாடல் ஆட்சியின் வெற்றிப்பயணத்தில் தமிழ்நாடு வரலாறு காணாத வகையில் வெற்றிநடை போட்டுச் செல்கிறது.
கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு பல குடும்பங்களின் தலையெழுத்தை மாற்றியுள்ளது.
திமுக அரசு தொடர்ந்தால் தான் தமிழ்நாடு நன்றாக இருக்கும் மக்கள் நம்பிக்கை திமுக அரசின் மீது அதிகரித்து வருகிறது.
தமிழ்நாடு உலக அரங்கில் தனித்துவமான அடையாளத்தைப் பெற்றுள்ளதாக முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தொழில்துறை வளர்ச்சி, முதலீடு ஈர்ப்பு, வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது.
கருத்துக்கணிப்பில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் 12% வாக்கு வித்தியாசம் உள்ளது என தெரிவித்துள்ளது.
கருத்துக்கணிப்புகளை திமுக கூட்டணியின் தேர்தல் முடிவுகள் உண்மையாக்கும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி தெரிவித்துள்ளார்,
