பேசி 20 வருஷம் ஆச்சு… பவன் கல்யாண் விளக்கம்!

எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை

Mar 16, 2026 - 14:18
 1
பேசி 20 வருஷம் ஆச்சு… பவன் கல்யாண் விளக்கம்!

பேசி 20 வருஷம் ஆச்சு… பவன் கல்யாண் விளக்கம்!

விஜய்யை சந்தித்தே 20 வருடங்கள் ஆகி விட்டது 

விஜய்க்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை சமீபத்தில் நான் எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என சர்ச்சைக்கு பவன் கல்யாண் விளக்கம் அளித்துள்ளார்.

கூட்டணி குறித்து விஜய்யுடன் நான் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை எப்படி இந்த தகவல் பரவியதென்றே எனக்கு தெரியாது என்றும் பதிலளித்துள்ளார்.

விஜய்க்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை சமீபத்தில் நான் எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. கூட்டணி என்பது கட்சி தலைவர்களை மட்டும் கொண்டது கிடையாது.

கூட்டணி என்பது கட்சி நிர்வாகிகள், தொண்டர்களின் ஆதரவால் அமைவது அது ஒரு தனிப்பட்ட விஷயம்.

விஜய்யை என்.டி.ஏ கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக பவன் கல்யாணை வைத்து பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளியான தகவல் வெறும் வதந்தி என்றும், சிபிஐ விசாரணைக்கு விஜய் டெல்லி சென்ற நிலையில் பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியிருப்பதாக ஆங்கில ஊடகம் வெளியிட்டிருந்ததற்கு பவன் கல்யாண் மறுப்பு தெரிவித்துள்ளார்.