அன்புமணி பதவியில் இருந்து நீக்கம் – ராமதாஸ் சொல்வது என்ன?
இளைஞர்களை வழி நடத்தவே இந்த முடிவு

அன்புமணி பதவியில் இருந்து நீக்கம் – ராமதாஸ் சொல்வது என்ன?
தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டதற்கு காரணங்கள் பல உண்டு.
2026 சட்டமன்ற தேர்தலில் இளைஞர்களை வழி நடத்தவே இந்த முடிவு.
பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
அன்புமணி ராமதாஸ் பாமகவின் செயல் தலைவராக செயல்படுவார் எனவும் பாமக நிறுவனரான நான் தலைவர் பதவியையும் ஏற்கிறேன் என அறிவித்தார் நிறுவனர் ராமதாஸ்.
கூட்டணி விவகாரத்தில் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணத்தால் தந்தை – மகன் இடையே மோதல் என தகவல்.
தேர்தல் வெற்றிக்காக அயராது உழைக்க வேண்டுமென்ற நோக்கில் செயல் தலைவராக மாற்றம். வருகிற மே 11 மாமல்லபுரத்தில் நடைபெறும் வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு இதுவரை கண்டிராத அளவிற்கு மாபெரும் வெற்றி மாநாடாக நடத்திட மாநாட்டு குழு தலைவராக அன்புமணி நியமிக்கப்பட்டுள்ளார். மருத்துவர் அன்புமணி ராமதாஸ்ஸுடன் இணைந்து ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் – ராமதாஸ்