ஸ்டாலின் மீது பொய் புகார் பரப்பினால் நடவடிக்கை – செந்தில் பாலாஜி

ஸ்டாலின் மீது பொய் புகார் பரப்பினால் நடவடிக்கை – செந்தில் பாலாஜி

Dec 6, 2024 - 16:29
Dec 6, 2024 - 17:02
 11
ஸ்டாலின் மீது பொய் புகார் பரப்பினால் நடவடிக்கை – செந்தில் பாலாஜி

ஸ்டாலின் மீது பொய் புகார் பரப்பினால் நடவடிக்கை – செந்தில் பாலாஜி

கவுதம் அதானியை தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார் என வெளீயாகும் செய்தி தவறானது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

 திமுக ஆட்சியில் அதானி நிறுவனத்துடன் எந்தவித ஒப்பந்தமும் மேற்கொள்ளவில்லை எனவும், அதிமுக ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

மேலும், அதானியை தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்தித்ததாகவும், அதிக விலைக்கு சூரிய ஒளி ஒப்பந்தம் போடப்பட்டதாகவும் எதிர்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

இன்னும் குறிப்பாக மத்திய அரசின் புதுப்பித்தக்க மின்சாரத்தைப் பெறுவது குறித்த கட்டாய விதி எதுவும் இல்லாத காலகட்டத்தில் அதிமுக ஆட்சியில் அதானி லிமிடெட் நிறுவனம், தங்களுக்கு சொந்தமான ஐந்து நிறுவனங்கள் மூலமாக, 648 மெகாவாட் திறன் கொண்ட சூரிய சக்தியை உற்பத்தி செய்வதற்கான எரிசக்தி கொள்முதல் ஒப்பந்தத்தில் கடந்த 2015ல் கையெழுத்திட் டது.

இதை மறைத்து உச்சநீதிமன்ற உத்தரவையும் அறியாதவர்கள் போல் அதிமுக அரசின் மின்கொள்முதலை திமுக அரசின் மின்கொள்முதல் முடிவு போல் சித்தரிக்க துடிக்கும் அரைகுறை அரசியல்வாதிகளுக்கு அதானி நிறுவனத்தையோ அதிமுகவையோ விமர்சிக்க துணிச்சல் இல்லாமல் தவிக்கிறார்கல் என்பது மட்டும் புரிகிறது.

மேலும், பொய்த் தகவல்களைத் தொடர்ந்து பரப்புபவர்களேயானால், அவர்கள் மீது கடும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என செந்தில் பாலாஜி குறிப்பிட்டுள்ளார்.