மீண்டும் வெடிக்கும் மொழி சர்ச்சை… இந்தியில் வெளியான வானிலை அறிக்கை!

இந்தி விவாதப் பொருளாக மாறியுள்ளது

Mar 27, 2025 - 11:56
 5
மீண்டும் வெடிக்கும் மொழி சர்ச்சை… இந்தியில் வெளியான வானிலை அறிக்கை!

மீண்டும் வெடிக்கும் மொழி சர்ச்சை… இந்தியில் வெளியான வானிலை அறிக்கை!

சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய அறிக்கையில் மூன்றாவது மொழியாக இந்தி சேர்க்கப்பட்டுள்ளது.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருந்து வந்த அறிக்கையில், இனி வரும் காலங்களில் இந்தி மொழியிலும் சேர்த்து கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக வானிலை ஆய்வு மையம் நாள்தோறும் தினசரி அறிக்கைகளை வெளியிடுவது வழக்கமான ஒன்றாக உள்ளது.

இதில், தொடர்ந்து 24 மணி நேரத்திற்கு மழை மற்றும் வெயில் பதிவாகி உள்ள அளவு, பிற வானிலை மாற்றம் சார்ந்த தகவல்கள் மண்டலங்கள் வாரியாக வெளியிடுவார்கள்.

இந்த அறிக்கை இதற்கு முன்பு ஆங்கிலம் மற்றும் தமிழ் என இரண்டு மொழிகளில் மட்டுமே வெளியிடுவார்கள்.

இந்த முறை தான் இதுவரை பின்பற்றப்பட்டு வந்தது.

தற்போது இதில் இந்தி மொழியையும் சேர்த்து வெளியிட்டுள்ள ஆய்வு மையம் தான் முக்கியமான தலைமை வானிலை ஆய்வு மையம். அதாவது இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கிளையில் அடுத்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம்.

பிற மாநிலங்களை பொறுத்தவரை, கேரளாவில் ஆங்கிலத்திலும், ஆந்திராவில் தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் வழங்கப்படுகிறது.

தென்னிந்திய மாநிலங்களை பொறுத்தவரை இதுவரை 2 மொழிகள் மட்டுமே இடம்பெற்று வந்த சூழலில் தற்போது எந்தவித அறிவிப்புமின்றி மூன்றாவது மொழியாக இந்தியில் வானிலை அறிக்கை வெளியிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தக்கூடிய வகையில் உள்ளது.

ஏற்கனவே மத்தியிலும், மாநிலத்திலும் மும்மொழிக் கொள்கை விவகாரம் என்பது பூதாகரமாகியுள்ள நிலையில், தற்போது இந்த சம்பவமும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

அதாவது வானிலை மையத்தின் அதிகாரப்பூர்வ பக்கதிலேயே வெளியாகிருப்பது தான் மொழி சார்ந்த மோதல் போக்கை மீண்டும் அரசியல் களத்தில் அதிகரிக்கக் கூடிய வாய்ப்பை அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.