ஸ்டாலின் அதிமுக மீது பொய் குற்றச்சாட்டை முன் வைக்கிறார் – எடப்பாடி பழனிச்சாமி

தமிழகத்தில் அனுமதியின்றி கனிம வளங்கள் சுரண்டப்பட்டு கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன – எடப்பாடி பழனிச்சாமி

Dec 10, 2024 - 15:38
Dec 10, 2024 - 16:10
 7
ஸ்டாலின் அதிமுக மீது பொய் குற்றச்சாட்டை முன் வைக்கிறார் – எடப்பாடி பழனிச்சாமி

ஸ்டாலின் அதிமுக மீது பொய் குற்றச்சாட்டை முன் வைக்கிறார் – எடப்பாடி பழனிச்சாமி 

அ.தி.மு.க., எம்.பி., தம்பித்துரை சுரங்க மசோதாவை ஆதரித்து பேசியதாக உண்மைக்கு புறம்பான ஒரு தகவல்களை முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., குற்றம் சாட்டியுள்ளார்.

டங்ஸ்டன் சுரங்கத்தை தடுக்க தொடக்கத்திலேயே தி.மு.க., அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது அ.தி.மு.க., மீது குறை கூறி திசை திருப்பும் செயலில் தி.மு.க., ஈடுபடுகிறது. காங்கிரஸ் ஆட்சியில் யாருக்கு வேண்டுமானாலும் சுரங்க உரிமை கொடுக்கப்பட்டது. டங்ஸ்டன் சுரங்கத்தை தடுக்க ஆரம்பத்திலேயே தி.மு.க., அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அ.தி.மு.க., எம்.பி., தம்பித்துரை சுரங்க மசோதாவை ஆதரித்து பேசியதாக உண்மைக்கு புறம்பான தகவல்களை முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். ஏல முறையில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பில்லை என்பதால் வரவேற்பதாக தம்பித்துரை தெரிவித்தார்.

தமிழகத்தில் அனுமதியின்றி கனிம வளங்கள் சுரண்டப்பட்டு கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

முன்னதாக, சட்டசபையில், கூட்டத்தொடர் குறித்து, பல்வேறு கேள்விகளையும், குற்றச்சாட்டுகளையும் இ.பி.எஸ்., குறிப்பிட்டார். அவர் பேசுகையில், குறைந்த நாட்களே சட்டசபை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. மக்கள் பிரச்னையை எப்படி அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல முடியும் எனவும், தி.மு.க., தேர்தல் அறிக்கையில் ஆண்டுக்கு, 100 நாட்கள் சபை கூட்டம் என்று கூறியிருந்தனர். அப்படி பார்த்தால், 400 நாட்கள் கூட்டம் நடந்திருக்க வேண்டும்.

 

ஆனால், 119 நாட்கள் தான் கூட்டம் நடந்துள்ளது என எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.