கஞ்சா பயன்படுத்துவோர் 40% உயர்வு! ஆய்வில் வெளியான தகவல்!
நாள்தோறும் மது அருந்துபவர்களின் எண்ணிக்கையை விட கஞ்சா எடுத்துக் கொள்பவரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கஞ்சா, மருத்துவ மற்றும் கேளிக்கைக்கான ஒன்றாக கடந்த 40 ஆண்டுகளில் பெரும்பாலான அமெரிக்க மாகாணங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் நாள்தோறும் அல்லது ஒரு நாளுக்கு நெருக்கமான இடைவெளியில் கஞ்சா எடுத்து கொள்பவர்களின் எண்ணிக்கை சுமார் 1.77 கோடி என்றும் அதே இடைவெளியில் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை 1.47 கோடி எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 1992 பொறுத்தவரை கஞ்சா பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 10 லட்சத்துக்கும் குறைவாகவே இருந்துள்ளது. அனால் தற்போது இது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
அதாவது, போதைபொருள் பயன்பாடு மற்றும் ஆரோக்கியம் சார் தேசிய ஆய்வின் தரவுகள் புதன் கிழமை அடிக்ஷன் இதழில் வெளியிடப்பட்டது. இதில், அமெரிக்காவில் தாமாகவே முன்வந்து தங்களின் போதைப் பழக்கங்கள் குறித்து மக்கள் அளிக்கும் விவரங்களின் அடிப்படையில் இந்த தரவுகள் சேகரிக்கப்படுகின்றன எனவும், ஆல்கஹால் பயன்பாடு தற்போதும் விரிவாக இருப்பதாகவும், தற்போது கஞ்சாவை நாள்தோறும் பயன்படுத்துபவர்கள் மட்டுமே மொத்தம் 40% பேர் இருப்பதாகவும் இந்த ஆய்வை மேற்கொண்ட கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தின் கஞ்சா சார்புடைய ஜோனாத்தன் கால்கின்ஸ் தெரிவித்துள்ளார்.