மத்திய அரசின் ரூபாய் லட்சினையை உருவாக்கிய ஒருவர் தமிழன் என்பது உங்களுக்கு தெரியுமா – அண்ணாமலை கேள்வி
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம்

மத்திய அரசின் ரூபாய் லட்சினையை உருவாக்கிய ஒருவர் தமிழன் என்பது உங்களுக்கு தெரியுமா – அண்ணாமலை கேள்வி
தமிழக பட்ஜெட்டில் மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இந்திய ரூபாய் லட்சினை மாற்றத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் ரூபாய் லட்சினையை உருவாக்கிய ஒருவர் தமிழன் என்பது உங்களுக்கு தெரியுமா – அண்ணாமலை கேள்வி
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை நாளை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் நிதிநிலை தொடர்பான விவரங்கள் இன்று வெளியிடப்பட்ட நிலையில் முகப்பு படத்தில் இந்திய ரூபாய்க்கான குறியீடு தவிர்க்கப்பட்டு அதற்கு பதிலாக ரூபாய் என எழுதப்பட்ட லட்சினை இடம்பெறக்கூடிய வகையில் எல்லார்க்கும் எல்லாம் என்று குறிப்பிட்டு நாளைய தினம் தாக்கல் செய்யப்பட உள்ள நிதிநிலை அறிக்கையின் அறிவிப்பானையை தமிழக அரசு வெளியிட்டு இருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய ரூபாய் குறியீடு என்று தனித்த குறியீடு தமிழன் ஒருவரால் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மாநில அரசு வெளியிட்டிருக்கக்கூடிய நிதிநிலை அறிக்கை குறித்த முகப்பில் இந்திய ரூபாய் குறியீடு நீக்கப்பட்டுள்ளது மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விமர்சனங்களுக்கு தமிழக அரசு சார்பில் விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, இது அரசுரிமை சட்டத்திற்கு எதிரானது இல்லை எனவும், மொழி மீதான பற்றை வெளிப்படுத்த கூடிய வகையில் முதல்வர் அதை வெளியிட்டிருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இந்திய குறியீடு நீக்கப்பட்டு தமிழில் ரூபாய் பதியப்பட்டு வெளியிடப்பட்ட நிதிநிலை அறிக்கையின் முகப்பு பகுதிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், திமுக அரசின் மாநில பட்ஜெட் ஒரு தமிழரால் வடிவமைக்கப்பட்டது என்றும் முழு இந்தியாவால் ஏற்றுக்கொள்ளப்பட்டு நம்முடைய நாணையத்தில் இணைக்கப்பட்ட இந்த குறியீட்டை நீக்குவதன் அவசியம் என்ன? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
குறிப்பாக இந்த குறியீட்டை உருவாக்கிய உதயகுமார் என்பவர் திமுகவின் முன்னாள் எம்.எல்.ஏவின் மகன் என்பதை நான் நினைவுகூறுகிறேன் எனவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது கூட தெரியாத நீங்கள் எவ்வளவு முட்டாளாக இருக்க முடியும் எனவும் முதலமைச்சரை அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.
ஏற்கனவே, மும்மொழிக்கு எதிராக மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் மோதம் போக்கு நீடித்து வரும் நிலையில், தற்போது இந்திய குறியீடு நீக்கப்பட்டிருப்பது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.