கவனத்தை பெறும் பிரதமரின் வருகை!

15ம் தேதி கன்னியாகுமரியில் பிரதமர் மோடி பிரச்சாரம்

Apr 4, 2026 - 12:39
 30
கவனத்தை பெறும் பிரதமரின் வருகை!

கவனத்தை பெறும் பிரதமரின் வருகை!

சென்னையில் மோடி இன்று நடத்தும் கூட்டம் தமிழக அரசியலின் கவனத்தை பெற்று வருகிறது.


தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதமர் மோடி நேற்றும், இன்றும் அதாவது ஏப்ரல் 3 மற்றும் 4ம் தேதிகளில் தமிழகத்தில் முகாமிட்டு தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபடுகிறார்.

புதுச்சேரியில் பிரச்சாரத்தை முடித்து, நேற்றிரவு சென்னை ஏர்போர்ட் வந்த பிரதமர் மோடி, கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கினார்.

பிரதமர் மோடியை, தொழில், மருத்துவம் போன்ற துறைகளைச் சேர்ந்த பாஜக ஆதரவாளர்களாக உள்ள முக்கிய பிரமுகர்கள் சந்தித்து பேசினார்கள்.

அப்போது மூத்த தலைவர் எச்.ராஜாவும் பிரதமரை சந்தித்தார். இந்நிலையில் சென்னையில் இன்று பாஜக மத்திய கோர் கமிட்டி கூட்டத்தில் பிரதமர் பங்கேற்று, வேட்பாளர் தேர்வு மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்த இறுதிக்கட்ட ஆலோசனைகளை மேற்கொள்கிறார்.

குறிப்பாக, சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கூட்டணிக் கட்சிகளுடனான இடப் பகிர்வில் நிலவும் சிக்கல்களைத் தீர்த்து, வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்களின் பட்டியலை இறுதி செய்வது இக்கூட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

வேட்புமனுத் தாக்கலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பிரதமரின் இந்த வருகை கட்சி நிர்வாகிகளிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பூத் கமிட்டி வாயிலாக மேற்கொள்ள வேண்டிய பணிகள், தேர்தல் வியூகம் உள்ளிட்டவை தொடர்பாக கட்சியினருக்கு, பிரதமர் மோடி ஆலோசனை வழங்க உள்ளார். வரும் 15ம் தேதி கன்னியாகுமரியில், பிரதமர் மோடி பிரச்சாரம் செய்ய உள்ளார்.

இது குறித்தும் இன்றைய தினம் விவாதிக்கப்பட உள்ளது.