களைகட்டிய முதல் ஜல்லிக்கட்டு…..தொடங்கி வைத்த அமைச்சர்கள்!

600-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு

Jan 4, 2025 - 11:55
Jan 4, 2025 - 13:25
 19
களைகட்டிய முதல் ஜல்லிக்கட்டு…..தொடங்கி வைத்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே புதுக்கோட்டை மாவட்டம் தான் அதிக வாடி வாசல் கொண்ட மாவட்டமாக விளங்குகிறது.

அதேபோல், ஜனவரி மாதத்தில் நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டு முதன்முதலில் புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் தான் தொடங்கும்.

அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை கோலாகலமாக தொடங்கியது.

உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.  

இந்த போட்டியை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் அமைச்சர் மெய்ய நாதன் ஆட்சியாளர் அருணா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதனைத் தொடர்ந்து இதற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டியின் வாடிவாசல் வழியாக காளைகள் ஒவ்வொன்றாக களம் இறக்கப்பட்டு வருகின்றன. இதில் புதுக்கோட்டை மட்டுமல்லாது தஞ்சை திருச்சி திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 600-க்கும் மேற்பட்ட காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டு வருகிறது.  

பொதுமக்கள் இந்த போட்டியை உற்சாகமாக வரவேற்று கண்டுகளித்து வருகின்றனர்.